அமித் ஷா உயிருக்கு ஆபத்தா? கைது செய்யப்பட்ட ஆந்திர அதிகாரி!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட பகுதிகளில் உள்துறை அமைச்சக அதிகாரி போல் வேடமணிந்த ஒருவர்  தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும் சுதந்திரமாக சுற்றித் திரிந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.  
அமித் ஷா உயிருக்கு ஆபத்தா?  கைது செய்யப்பட்ட ஆந்திர அதிகாரி!!!
Published on
Updated on
2 min read

உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிரா சென்றிருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட பகுதிகளில் உள்துறை அமைச்சக அதிகாரி போல் வேடமணிந்த ஒருவர்  தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.  

அமித் ஷா தனது இரண்டு நாள் பயணத்தை முடித்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்த தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட ஹேமந்த் பவார், ஆந்திர பிரதேச எம்பி ஒருவரின் தனிப்பட்ட செயலாளர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவர் உள்துறை அமைச்சகத்தின் ஐடி கார்டை அணிந்துகொண்டு மணிக்கணக்கில் அமித் ஷாவையே சுற்றி சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரியாக அவர் நடந்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமித் ஷா கலந்து கொண்ட இரண்டு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார் எனவும் மேலும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும்  துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரின் வீடுகளுக்கு வெளியேயும் ஹேமந்த் காணப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

சந்தேகமடைந்த உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் மும்பை காவல்துறைக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் ஹேமந்த் பவாரை விசாரித்து வருகின்றனர்.  விசாரணையில் உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு குழு பட்டியலில் ஹேமந்த்தின் பெயர் இல்லை என்பதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

ஹேமந்த் பவார் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  

சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 30-ம் தேதி மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பிறகு ஷா முதன்முறையாக மும்பை சென்றுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com