மோடி பற்றி ராகுல் சொன்ன கடும் விமர்சனம் - குஷியில் காங்கிரஸ் - கோபத்தில் பாஜக

மோடி பற்றி ராகுல் சொன்ன கடும் விமர்சனம் - குஷியில் காங்கிரஸ் - கோபத்தில் பாஜக

சர்வாதிகாரி ஹிட்லரும் கூட தேர்தலில் வெற்றி பெற்றார் என பாஜகவை தாக்கி ராகுல் காந்தி பேசியுள்ளார்.  நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் ஆர்எஸ்எஸ்-ன் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் ராகுல் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

சர்வாதிகார ஆட்சி:

ஹிட்லரும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார், அவரும் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது என கூறிய ராகுல் அதை அவரால் எவ்வாறு செய்ய முடிந்தது என்ற கேள்வியை எழுப்பி அதற்கும் அவரே பதிலும் கூறியுள்ளார்.  ஜெர்மனியின் அனைத்து நிறுவனங்களையும் ஹிட்லர் அவருடைய கட்டுபாட்டில் வைத்திருந்தார்.  அதைப்போல முழு அமைப்பின் கட்டுப்பாட்டையும் அவரிடம் தந்தால் அவராலும் வெற்றி பெற் முடியும் என விளக்கமளித்தார்.

மேலும் படிக்க: இந்திய பொருளாதாரம் பற்றி நிர்மலாவுக்கு ஒன்றும் தெரியாது - ராகுல் விளாசல்!

மக்களை நேசிப்பவர்கள்:

மக்களைக் குறித்து அதிகமாக அக்கறை கொள்பவர்களே அதிகமாக தாக்கப்படுகிறார்கள் எனவும் ராகுல் கவலை தெரிவித்துள்ளார்.

மரணிக்கும் ஜனநாயகம்:

ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது எனவும் அதை குறித்து மக்கள் என்ன எண்ணுகிறார்கள் எனவும் மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.  70 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயகம் 8 ஆண்டுகளில் முடிவடைந்து விட்டது எனவும் ராகுல் விமர்சித்துள்ளார்.  

4 பேர் தலைமையில்:

நாட்டில் ஜனநாயகம் இல்லை.  பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை அவையில் விவாதிக்க கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது 4-5 பேரின் நலனைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் அரசாங்கத்தின் ஒரு செயல்திட்டம் . பெரும் வணிகர்களின் நலனுக்காக சர்வாதிகாரம் மிக்க 2 நபர்களால் நடத்தப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்

யாருக்கும் பயப்படமாட்டோம்:

காந்தி குடும்பத்தை பாஜக தாக்குகிறது என கூறியுள்ளார் ராகுல்.  காங்கிரஸ் கூட்டணி அரசியல் சித்தாந்தத்துடன் செயல்பட்டு வருகிறது.  தொடர்ந்து செயல்படும் எனவும் மிரட்டல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் பயப்பட மாட்டோம் எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.  பயப்படுபவர்களே பயமுறுத்துவார்கள் எனவும் ராகுல் பேசியுள்ளார்.

பொய் பேசுபவர்கள்:

எத்தனை முறை தாக்கினாலும் தொடர்ந்து போராடுவேன் என ராகுல் கூறியுள்ளார்.  மிரட்டுபவர்கள் நாட்டின் நிலையைக் கண்டு அஞ்சுகிறார்கள் எனவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத பொய்யர்கள் அவர்கள் எனவும் ராகுல் விமர்சித்துள்ளார்.  ஒரு நாளில் 24 மணிநேரமும் பொய்யை மட்டுமே பேசுபவர்கள் எனவும் பேசியுள்ளார் ராகுல்.

மேலும் படிக்க: தலைநகரை முடக்கிய காங்கிரஸ்...!