"எரிவாயு விலை குறைப்பு பிரதமரின் தேர்தல் பரிசு" காங்கிரஸ் கட்சி விமர்சனம்!!

"எரிவாயு விலை குறைப்பு பிரதமரின் தேர்தல் பரிசு" காங்கிரஸ் கட்சி விமர்சனம்!!

சமையல் எரிவாயு விலை குறைப்பு பிரதமரின் தேர்தல் பரிசு என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. 

வீட்டு உபயோக எரிவாயு உருளையின் விலையில் 200 ரூபாயை மத்திய அரசு  குறைத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கர்நாடக தேர்தல் தோல்வி, எதிர்கட்சிகளின் கூட்டங்கள் வெற்றி ஆகியவையே மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

தோல்வி பயத்தில் உள்ள பாஜக தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்யும் மனநிலையில் உள்ளதால் மேலும் பல பரிசுகளை எதிர்ப்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க || "இனி அடுத்தடுத்து அதிமுக-விற்கு வெற்றி தான்" திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!!