"விடை கொடு சாமி, விட்டு போகின்றேன்": கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போன மாணவி!

"விடை கொடு சாமி, விட்டு போகின்றேன்": கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போன மாணவி!

புதுச்சேரி: மனைவி ஒருவர், சினிமாவில் நடிப்பதற்காக யாரிடமும் சொல்லிக்கொள்ளமல் விடுதியை விட்டு வெளியேறி சென்றுள்ளார். 

புதுச்சேரி மாநிலம் தவளைக்குப்பத்தைச் சேர்ந்த மாணவி சாதனா. 20 வயதான இவர் திருநள்ளாறு அடுத்த செருமாவிலங்கையில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 

இவருக்கு சிறுவயதில் இருந்தே சினிமா பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பல காணொளிகளை நடித்து வெளியிட்டுயுள்ளார். கல்லூரி இரண்டாம் ஆண்டு முடிந்து கோடை விடுமுறை தொடங்கியதால் இந்த இடைப்பட்ட நேரத்தில் மாணவி சாதனா சினிமா வாய்ப்புகளை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 14ம் தேதியன்று கல்லூரி விடுதியில் தங்கியிருந்த சாதனா, சக மாணவிகளிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறியுள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விரைந்து சென்ற திருநள்ளாறு போலீசார் மாணவியின் அறையில் சோதனை செய்தனர். அப்பொழுது மாணவி எழுதி வைத்து விட்டு சென்ற கடிதம் கிடைத்துள்ளது. 

அந்த கடிதத்தில், தன்னை யாரும் தேட வேண்டாம், தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது, அதனால் தனது கனவை நோக்கி செல்வதாக எழுதியிருந்தது. மேலும், சினிமாவில் நடித்து முடித்து விட்டு, மீண்டும் தனது படிப்பை தொடருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த திருநள்ளாறு காவல் ஆய்வாளர் அறிவுச் செல்வம், மாயமான மாணவி உண்மையாகவே சினிமாவில் நடிப்பதற்குதான் சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற ரீதியில் விசாரணை செய்து வருகின்றனர்.

படிக்கும் பொழுது இது போன்ற கனவுகள் இருப்பது வழக்கம் தான். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்துவது முறை இல்லை. தனது கனவை, பெற்றோரிடம் தெரிவித்து அவர்கள் வழிகாட்டுதல்கள் படி அதே கனவை நிறைவேற்றிகொள்ளவது புத்திசாலித்தனமாகும். இது போன்று, சொல்லிக்கொள்ளாமல் செல்வது, அவர் ஆபத்தில் சிக்கினாலும் மீட்பது கடினமாக அமைந்து விடும்.

இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து விட்டு பெற்றோரிடம் முறையாக தெரிவித்து செயல்படுவதே நல்லது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகினறனர்.

இதையும் படிக்க: முன்னால் டி.ஜி.பி க்கு சிறை தண்டனை!