பெங்காலைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது 6 வயது மகனுக்கு, அரிய வகை நோய் இருப்பதை கண்டறிந்தார். 12,000-இல் ஒரு குழந்தைக்கு கண்டறியப்படும் ‘பைலியரி ஆர்டீசியா’ (biliary artesia) கல்லீரலை பாதிக்கும் நோய் எனப்படும் நிலையில், அதனை சரி செய்ய, சிகிச்சைக்காக, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது மகனுக்காக அனுமதி பெற்றார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, பிலியரி அட்ரேசியா என்பது கல்லீரலில் இருந்து பித்தப்பைக்கு பித்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் ஏற்படும் அடைப்பாகும். கல்லீரலின் உள்ளே அல்லது வெளியே உள்ள குழாய்கள் சாதாரணமாக உருவாகாத போது இந்த நிலை ஏற்படுகிறது. இது பிறவி நோயாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மாணவியின் உடலுறுப்புகள் தானம் செய்த பெற்றோர்!
குழந்தையின் கல்லீரல் பெரிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மாற்று உறுப்பு பெற தானம் செய்பவர் தேவைப்பட்டது. அதற்கு தனது உறுப்பையே பயன்படுத்திக் கொள்ளும் படி அந்த தந்தை கேட்டுக் கொண்டதால், கடந்த ஆகஸ்டு மாதம் 23ம் தேதி 12 மணி நேரம் வரை ஒரு நீண்ட சிகிச்சை அந்த குழந்தைக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தை சரியானதும், சிகிச்சையின் கட்டணம் 15 லட்சம் கட்ட வேண்டிய நிலையில் இருந்ததால், அந்த தந்தை, தனக்கென்று இருந்த ஒரு நிலத்தையும் விற்று பணத்தைக் கட்டி இருக்கிறார்.
பத்திரிக்கையாளர்களால் சூரஜ் பாபுஷா என அடையாளம் காணப்பட்ட அந்த தந்தை, குழந்தை உயிருடன் இருப்பது தான் தனக்கு முக்கியமாக தெரிந்தது என புன்னகையுடன் கூறியிருக்கிறார். இச்சம்பவம், அனைவருக்கும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.