ஒடிசா ரயில் விபத்து: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு...!

ஒடிசா ரயில் விபத்து:  முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு...!

ஒடிசா ரயில் விபத்தில்  சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரங்கலும் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில்  பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.   

அதாவது, நிவாரநாத் தொகையானது, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் இறந்தவரின் உறவினர்களுக்கு 
ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும்  அறிவித்தார். 


மேலும், உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துகே கொண்டார். 

அதனையடுத்து,  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும்,  எனவும், வெள்ளிக்கிழமை நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புவனேஸ்வர் மற்றும் பாலசோர் இடையே உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com