ராகுல் விமர்சனம்...பதிலடி கொடுத்த பாஜக..

ராகுல் விமர்சனம்...பதிலடி கொடுத்த பாஜக..

ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்ததற்கும், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அவருக்கு எதிராக நடந்து வரும் அமலாக்கதுறை விசாரணைக்கும் இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளை ராகுல் "குற்றம் சாட்டுவதாக" பதிலடி கொடுத்துள்ளது பாஜக.

உண்மையான சர்வாதிகாரி:

ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, மத்திய முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் தலைவர் "வெட்கக்கேடான மற்றும் பொறுப்பற்ற" கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும், அவசரநிலையை விதித்து மக்களின் ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தி சர்வாதிகாரம் செய்தது அவரது பாட்டியும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தியே என்றும் விமர்சித்துள்ளார்.

மக்கள் ஆதரவு:

ஊழல் மற்றும் தவறான செயல்களிலிருந்து அவர்களை பாதுகாக்க இந்திய நிறுவனங்களை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள் என்றும் மக்கள் அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால், பாஜகவை ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள் என்றும் ராகுலை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் பிரசாத்.

மக்கள் பார்த்த சர்வாதிகாரம்:

மக்கள் சர்வாதிகாரத்தைப் பார்த்தார்கள் என்றால், 1974ம் ஆண்டு அவசரநிலைக் காலத்தில்தான் எனவும் அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆசிரியர்கள் உட்பட மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் எனவும் நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மக்களின் நிராகரிப்பு:

இந்திய மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்கும் போது  ஜனநாயகத்தை ஏன் குறை கூற வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் "நல்ல தலைவர்களை" கொண்ட கட்சிக்குள் ஜனநாயகம் இருக்கிறது என்றால் மக்கள் ஏன் அவர்களை தொடர்ந்து நிராகரிக்க வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊழல் வழக்கு:

ராகுலுக்கும்  காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கும் எதிராக அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த வழக்கை எழுப்பிய பிரசாத், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இரு காந்திகளின் தலைமையிலான யங் இந்தியன் என்ற   நிறுவனம் வெறும் 5 லட்சம் முதலீட்டில் எப்படி வாங்கியது என்பது குறித்து பதில் சொல்ல வேண்டும் என்றும் பேசியுள்ளார் பிரசாத். இந்த வழக்கில் ராகுலுக்கும் சோனியாவுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய நீதித்துறை மறுத்துவிட்டது.  அதனால் அவர் இப்போது நிறுவனங்களை குற்றம் சாட்டுகிறார் என்று பாஜக தலைவர் கூறியுள்ளார்.

ஊழலற்ற அரசு:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஊழலுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தபோது  நிதி முறைகேடுகளுக்கு ஒத்ததாக மாறியதால் காங்கிரஸும் அதைச் சுற்றியுள்ள அமைப்புகளும் தடுமாறி வருகின்றன எனவும் பிரசாத் கூறியுள்ளார்.

பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஊழல் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்கள் டெல்லி முதல் மும்பை மற்றும் கொல்கத்தா வரை பல்வேறு இடங்களில் அமலாக்கதுறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com