கேரளா | பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் தாரேக்காடு என்னும் பகுதியில் வைத்து பக்கவாட்டு சாலையில் இருந்து கவனக்குறைவாக நெடுஞ்சாலையில் நுழைய முயன்ற கார் மீது பைக்கில் வந்த தம்பதியினர் மோதியதில் , பைக்கில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறு சாலையில் விழுந்துள்ளனர்.
அதே நேரத்தில் எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று கீழே விழுந்த பெண் மீது ஏறி இறங்கியுள்ளது. இந்த விபத்தில் ஓமனா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.அவரது கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்துள்ள பாலக்காடு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க | பிக்கப் வாகனத்தின் டயர் வெடித்து விபத்து... ஒருவர் பலி...