சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ஆன் லைன் வழி (Online) உரிமம் வழங்கும் திட்டத்தினை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
சென்னை ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் உள்ள அம்மா மாளிகை கட்டிடத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் உரிமையாளர்களுக்கு இணைய வழி மூலம் உரிமம் வழங்கும் திட்டத்தினை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார்.அதன்பின் இணையதளம் மூலம் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்ற 10 நபருக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதை பதிவு செய்ய நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, திரு.விக.நகர், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் நேரில் இதற்காக ஆண்டுக்கு 50 ரூபாய் பதிவுக் கட்டணமும் வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி நோய்த் தடுப்பு ஊசி போடப்பட்டதற்கான கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். அந்த ஊசியின் விலை தனியார் கிளினிக்குகளில் 600- 700 ரூபாய் வரை ஆகும்.
செல்லப்பிராணியின் பெயர், நிறம், ப்ரீட், வயது, வளர்ப்பவரின் பெயர் மற்றும் முகவரி, நோய் பிரச்னை என அனைத்தையும் உரிமப் படிவத்தில் பதிவு செய்வது கட்டாயம். அதுமட்டுமன்றி நாய்க்கு எந்த நோய் பிரச்னைகளும் இல்லை என மருத்துவ சான்றிதழும் இணைக்க வேண்டும். இத்தனை வேலைகளை செய்து முடித்த பின்னரே செல்லப் பிராணியின் பதிவை உறுதி செய்ய முடியும். அதேபோல் ஒவ்வொரு வருடமும் நாய் வளர்ப்புக்கான உரிமத்தை புதுப்பித்தல் செய்வது கட்டாயம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி மேயர் பிரியா பேசுகையில்:
ஆன்லைனில் விண்ணப்பித்த உடன், அந்த மண்லத்திற்குட்டப்பட்ட கால்நடை மருத்துவர்கள் செல்லப்பிராணிகளின் விபரம் குறித்து ஆய்வு செய்து 7 நாட்கள் விண்ணப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இதுகுறித்து செல்லப்பிராணிகளை வைத்துள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லையெனில் பொதுமக்களிடம் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போது வரை நாய், பூனை ஆகியவை மட்டுமே செல்லப்பிராணிகளாக இத்திட்டத்திற்குள் வரையறுத்துள்ளதாகவும், தொடர்ந்து வேறு ஏதாவது பிராணிகளையும் இத்திட்டத்தில் இணைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,..
2019-2020 ஆண்டுகளில் மழைநீர் வடிகால் முறைக்கேடு குறித்த ஆவணங்களை வைத்துதான் வழக்கு நடந்து வருகிறது எனவும், அந்த வழக்கின் விசாரணைக்குதான் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. செல்லப்பிராணிகள் மட்டுமின்றி தெருநாய்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும், தெருநாய்களை முறைப்படுத்தவும், செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை தங்களது குழந்தைகள் போல ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர். அதற்கு இந்த ஆன்லைன் உரிமம் வழங்கும் திட்டம் உதவியாக இருக்கும் என்றும் கூறினார். நாய்களுக்கு உரிமம் வாங்க வேண்டுமா? என்கிற பொதுமக்களின் அறியா நிலை கண்டிப்பாக மாறும் எனக் குறிப்பிட்ட அவர், இத்திட்டம் குறித்து மண்டலம் வாரியாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும் என்றும்
மாநகராட்சியில் உள்ள 17 கால்நடை மருத்துவர்களோடு, தன்னார்வு அமைப்புகள் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்தும் இந்த விழிப்புணர்வு திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்..
அதோடு, ரேபிஸ் போன்ற நோய்களைப் பொறுத்து வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகவும், தமிழ்நாட்டில் ஊட்டியில் மட்டும்தான் ரேபிஸ் நோய் பரவல் இல்லாமல் உள்ளது என்றும், தெருநாய்களை பொதுமக்கள் தத்தெடுப்பதை ஊக்கப்படுத்துவோம் என்றும் கூறினார். மேலும், தெருநாய்கள் அதிகமா கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் எனவும், உரிமம் பெற்ற நாய்கள் கைவிடுதலை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | "ஸ்மார்ட்சிட்டி ஊழலில் கவர்னருக்கு தொடர்பு" வைத்திலிங்கம் தகவல் !