இஸ்லாமியர்களின் திறந்த வெளி தொழுகை ஏற்புடையது அல்ல...ஹரியானா அரசு அறிவிப்பு...

இஸ்லாமியர்களின் திறந்த வெளி தொழுகை ஏற்புடையது அல்ல...ஹரியானா அரசு அறிவிப்பு...

ஹரியானா மாநிலம் குர்கானில் வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் திறந்த வெளியில் தொழுகையை  நடத்த கூடாது என திட்டமிடப்பட்டுள்ளது.
Published on

பொது இடங்களில் இஸ்லாமியர்கள் நடத்தும் தொழுகையின் போது இரு சமூகங்களுக்கு இடையில் பிரச்சனை வருவதை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவித்தனர். குர்கான் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்னர் குர்கான் பகுதியில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வரும் போது மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர் அவர்கள் மீது மாட்டு சாணத்தை வீசியுள்ளனர். அதை தொடர்ந்து "ஜெய் ஸ்ரீ ராம்" என மற்றொரு பிரிவினர் சப்தமிட்டுள்ளனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு அப்பகுதியில் நிலவியது. 

இது குறித்து ஹரியானா முதலமைச்சர் பிராத்தனை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு அதே சமயம் போக்குவரத்து சம்மதமாக எவ்வித பாதிப்பும் இருக்க கூடாது எனவும் தெரிவித்து தொழுகையை நடத்த தடை விதித்தார்.உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதை கருத்தில் கொண்டு தொழுகை செய்ய அரசு அனுமதி அளித்தது.

தொழுகைக்கு அனுமதி அளித்தது தொடர்ந்து மீண்டும் பிரச்சனை வெடித்ததால் தடை விதிப்பதை தவிர்க்க முடியாது என கூறியுள்ளது. ஹரியானா முதலமைச்சர் எம்.எல்.கட்டாரின் மறு உத்தரவு வரும் வரை குர்கானில் பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை தவிர்க வெண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டது.


மறு உத்தரவு வரும் வரை அனைவரும் தங்களது வீட்டிலும் பிற வழிபாட்டு தலங்களிலும் தொழுகை செய்து கொள்ளுமாறு என தெரிவித்தனர்.இது சம்மந்தப்பட்ட விவாதங்களுக்கு இரு சமூகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் விரைவில் இதற்கான முடிவு எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

வழிப்பாட்டு தலங்களில் பிராத்தனை செய்வது குறித்து அரசுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com