தங்கப் பதக்கத்தை போன் வால்பேப்பராக வைத்திருந்தாராம் ஜெரெமி!

நேற்று தங்கம் வென்ற ஜெரெமி, காமன்வெலத் போட்டிகளின் பதக்கங்கள் குறித்த தகவல்கள் வெளியானதும், தனது போனின் வால்பேப்பராக போட்டியின் தங்கப் பதக்கத்தை வைத்திருக்கிறார். பின், ஒரு வாரத்திலேயே தங்கமும் வென்றார்.

தங்கப் பதக்கத்தை போன் வால்பேப்பராக வைத்திருந்தாராம் ஜெரெமி!

2022ம் ஆண்டு நடக்கும் காமன்வெல்த் போட்டிகளின் பளு தூக்கும் போட்டியில், ஆடவர்களுக்கான 67 கிலோ எடைப் பிரிவில், தங்கம் வென்ற ஜெரெமி லால்ரினுங்கா, அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

140 மற்றும் 160 கிலோ எடைகளைத் தூக்கி, 300 கிலோ எடையுடன் சாதனையும் படைத்து, தங்கத்தையும் வென்றார் ஜெரெமி. க்ளீன் மற்றும் ஜெர்க் என்ற கணக்கில், இரண்டாவது முறையே பெரும் வெற்றிப் பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கும் இவர், 19 வயதே ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல குத்துச்சண்டை வீரரான லால்னிஹ்ட்லுங்கா, தேசிய அளவில் வெற்றிப் பெற்றவர். அவரது மகனான லால்ரினுங்கா, தனது தந்தையைப் போலவே விளையாட்டு வீரராக விரும்பி, பளு தூக்குதலுக்கு மாறியிருக்கிறார். மீராபாய் சானுவை அடுத்து, இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் வாங்கித் தந்து, இன்று நம் நாட்டிற்கே பெருமை சேர்த்த ஜெரெமி, தங்கம் வெல்வதையே தனது முழு நேரக் குறிக்கோளாக வைத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாவது தங்கம் வென்றது இந்தியா!

மிசோரம், ஆஇஸ்வால் பகுதியைச் சேர்ந்த ஜெரெமி, 163 கிலோ எடையை, மூன்றாவது முறை தூக்க முயன்ற போது, அவருக்கு காயம் ஏற்பட்டதால், அவரடு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது, அவர் குறித்த மறொரு செய்தி வெளியாகி, மக்களுக்கு அவர் மீதான மரியாதையை அதிகரிக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

சிறு வயதில் இருந்தே, தனது தந்தையான குத்துச் சண்டை வீரர் லால்னிஹ்ட்லுங்கா-வின் பதக்கங்களை வைத்து விளையாடிய ஜெரெமி, விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கிறார். சப் ஜூனியர் நிலையில் இரண்டு முறை தங்கம் வென்ற லால்னிஹ்ட்லுங்கா, ஜெரெமியின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து சகோதரர்களில், மூன்றாவது குழந்தையான ஜெரெமி, அவரது வீட்டில் செல்லப் பிள்ளையாக இருந்திருக்கிறார். பின், மூங்கில் கட்டைகள் மற்றும் தண்ணீர் பைப்புகள் வைத்து பளு தூக்குவதற்கான பயிற்சி பெற்று வந்திருக்கிறார். தனது பயிற்சி தொடங்கிய ஓராண்டிலேயே, தனது சிறப்பை வெளிக்காட்ட துவங்கி இருக்கிறார். 2011ம் ஆண்டில், பூனே ராணுவ நிறுவனத்தில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2015இல் இருந்து படியாலாவில் நேஷனல் கேம்பில் பயிற்சி எடுத்த பின், 2016ம் ஆண்டில் நடந்த சர்வதேச பளுதூக்கல் போட்டி ஒன்றில், ஆடவர்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில், வெள்ளி பதக்கம் வென்றார். அப்போது அவரது வயது 13 தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2017இல் ஒரு வெள்ளி, 2018ம் ஆண்டு ஆசிய யூத் சேம்புயன்ஷிப் போட்டிகளில், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற ஜெரெமி, புயினோ ஏர்ஸ்-இல் நடந்த யூத் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார்.

தனது சிறப்புகலை, சிறு வயதில் இருந்தே வெளிப்படுத்தி வந்த ஜெரெமி, முதன் முதலில் 2019ம் ஆண்டில் தேசியளாவிய போட்டி ஒன்றில், 306 கிலோ பளு தூக்கி தனது வாழ்க்கையின் மிகப் பெரிய சாதனையைப் படைத்தார். பின், தனது முட்டியின் பின்புறம் இருந்த ஒரு கட்டியை நீக்க செய்யப்பட்ட சிகிச்சை காரணமாக, 2021ம் ஆண்டு எந்த பதக்கமும் இன்றி வீடு திரும்பினார்.

இந்த வருட காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடும் போது, கடந்த பிப்ரவரி மாதம் தனது முதுகெலும்பில் ஒரு கடும் வலியை உணர்ந்திருக்கிறார் ஜெரெமி. இந்த போட்டியில் கலந்து கொள்வது அவருக்கு பெரும் ஆபத்தானதக அமையக் கூடும் எஅ எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னும், தனது ஆரவ்த்தைத் தொடர, பல வகையான சிகிச்சைகள் மேற்கொண்டு, காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக் கொண்டார்.

இந்த போட்டிகள் தொடங்குவது குறித்த அறிவிப்புகள் அடுக்கக்டுக்காக வந்த போது, போட்டிகளின் பதக்கங்கள் குறித்த தகவல்களும் வெளியாகின. அப்போது, தங்கப்பதக்கத்தின் வடிவமைப்பு வெளியானதும், அதன் போட்டோவை போனில் ஏற்றி, அதனைத் தனது வால்பேப்பராக வைத்துக் கொண்டாராம் இவர். அதுவே, தன்னை, தங்கத்தை நோக்கி பயணிக்க ஊக்குவித்ததாகவும் அவர் கூறுகிறார்.

இந்தியாவின் ஐந்தாவது பதக்கத்தை வென்ற ஜெரெமி, பளு தூக்கலில் இரண்டாவது தங்கப்பதக்க வெற்றியாளராக இருக்கிறார். அவரது அடுத்தத் திட்டங்கள் குறித்து பேசுகையில், “இந்தாண்டு இறுதியில், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்க உள்ளன. பாரிஸ் ஒலிம்பிக்குகளின் தகுதித் தேர்வு நடைப் பெற இருக்கிறது. அதில் தேர்வாவது தான் தற்போதைய குறிக்கோளாக வைத்திருக்கிறேன்.” என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார்.

தற்போதைய தங்கத்தை வெல்ல, வால்பேப்பரை மாற்றியது போல, ஒலிம்பிக்குகளில் வெற்றிப் பெற புதிய வகையில் ஒரு ரிமைண்டரை தனது போனில் வைக்கத் தயாராகி வருவதாகத் தெரிவித்து புன்னகைத்தார் ஜெரெமி.