ஈட்டி எறிதலில் உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பெற்றார் நீரஜ் சோப்ரா...!

ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா உலகின் நம்பர் ஒன் இடம் பிடித்து சாதனை:...
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா, 25 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
கடந்த 5-ம் தேதி தோஹா டயமண்ட் லீக்கில் தங்கம் வென்றதன் மூலம் அவரது 2023 சீசனை வெற்றிகரமாக தொடங்கினார்.
இந்நிலையில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் உலகின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மொத்தம் ஆயிரத்து 455 புள்ளிகளுடன் ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆயிரத்து 433 புள்ளிகளும் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க | அரசு மற்றும் கலை கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு...!