சாதனை படைப்பாரா இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா!

சாதனை படைப்பாரா இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா!

உலகக் கோப்பை செஸ் தொடாின் இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாதனை படைப்பாரா என ரசிகா்கள் ஆவலுடன் எதிா்பாா்த்துள்ளனா். 

10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென், சென்னையை சோ்ந்த பிரக்ஞானந்தா ஆகியோா் மோதினர். மாக்னஸ் கார்ல்சென் கருப்பு நிற காய்களுடனும் , பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினர்.

இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில் முதல் சுற்று டிராவில் முடிந்தது. தொடா்ந்து இரண்டாவது சுற்று போட்டி இன்று நடைபெற உள்ளது. பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார். 2-வது சுற்று போட்டியும் சமன் ஆனால் டை பிரேக்கருக்கு நகரும். 

இந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சாதனை படைப்பாரா என ரசிகா்கள் ஆவலுடன் எதிா்பாா்த்துள்ளனா். இதற்கிடையே இன்று நடைபெற உள்ள 2-வது சுற்று போட்டி குறித்து பிரக்ஞானந்தா பேசுகையில், இந்த கடினமான போட்டியில், வெற்றிக்காக கார்ல்சன் தீவிரமாக போராடுவார் என்றும், அதே நேரத்தில் புத்துணர்ச்சியுடன் தன்னால் முடிந்ததை வெற்றிக்காக முயற்சிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க || "ஜிஎஸ்டி, திவால் மற்றும் திவால் குறியீட்டால் நம்பிக்கை அதிகரித்துள்ளது" பிரதமா் மோடி பெருமிதம்!