இந்தியா vs தென்னாபிரிக்கா முதல் ஒரு நாள்..! போராடி தோற்ற அணி..!

இந்தியா vs தென்னாபிரிக்கா முதல் ஒரு நாள்..! போராடி தோற்ற அணி..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

ஒரு நாள் கிரிக்கெட்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முன்னதாக மோசமான வானிலை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

மேலும் படிக்க:  பாலியல் குற்றச்சாட்டில் தப்பியோடிய கிரிக்கெட் வீரர் கைது!!!

தென்னாப்ரிக்கா பேட்டிங்:

இதனையடுத்து பேட்டிங் செய்யத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 75 ரன்களும், கிளாசன் 74 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

போராடி தோல்வி:

பின்னர், 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 40 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசிவரை போராடிய சஞ்சு சாம்சன், ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி, ராஞ்சியில் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ளது.