UPSC தேர்வில் 107 ராங்க் - தமிழ்நாடு அளவில் முதலிடம் பெண் சாதனை

UPSC தேர்வில் 107 ராங்க் -  தமிழ்நாடு அளவில் முதலிடம்  பெண் சாதனை

பெரம்பூரைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 107வது இடம் பிடித்து, தமிழ்நாடு அளவில் முதல் இடத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர்பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் தகுதி பெற்றவர்கள், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வை எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை ஆளுமைத் தேர்வு நடைபெற்றது.

மேலும் படிக்க | சர்வதேச கிக்பாக்ஸிங் உலககோப்பை தமிழ்நாட்டு மாணவன் தங்கம் வென்று சாதனை!!!

இந்நிலையில், இறுதி தேர்விலும் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 933 குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், முதல் நான்கு இடங்களை பெண்கள் பெற்றுள்ளனர். இஷிதா கிஷோர் என்பவர் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

யு.பி.எஸ்.சி. குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களும் சாதனை படைத்துள்ளனர். சென்னை பெரம்பூரைச் சேரந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.  எலக்ட்ரீசியன் தொழில் செய்பவரின் மகளான இவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரியில் படித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வை (UPSC-Civil Serivice) அவர் எழுதியுள்ளார். முதல் முயற்சியிலேயே சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.