"விரைவில் டாஸ்மாக்கில் கட்டிங் (90மி.லி.)" அமைச்சர் முத்துசாமி தகவல்! 

"விரைவில் டாஸ்மாக்கில் கட்டிங் (90மி.லி.)" அமைச்சர் முத்துசாமி தகவல்! 
Published on
Updated on
1 min read

கர்நாடகாவில் இருப்பதை போல விரைவில் தமிழ்நாட்டு டாஸ்மாக்கிலும் கட்டிங் (90மி.லி.) அறிமுகப்படுத்த உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு, வீட்டுவசதி மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தமிழ்நாட்டில், 90 மில்லி காகிதக் குடுவையில் மதுவை வழங்க ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகை இருப்பை இரவு நேரங்களில் ஊழியர்கள் எடுத்துச் செல்லும்போது பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுவதாகவும், அதனை தடுக்கும் வகையில் வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், வங்கி அதிகாரிகளே நேரடியாக கடைக்கு வந்து பெற்று செல்லும் வகையிலோ அல்லது வாகனங்கள் மூலம் ஒவ்வொரு கடையாக பெறக்கூடிய வகையிலோ நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அதேபோல், கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல, கண்ணாடி பாட்டில்களுக்கு பதில், காகிதக் குடுவையில் (டெட்ரா பேக்) வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அவர், மேலும், ஒரு பாட்டிலை வாங்கி இரண்டு பேர் பிரிக்கும்போது தான் அதில் விஷம் உள்ளிட்ட பொருட்கள் கலப்பதற்கு வாய்ப்பு ஏற்படுவதாகவும், இந்த பிரச்சனைகளை தவிர்க்க,90 மில்லி காகிதக் குடுவையில் வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com