37 ஆண்டுகள் கழித்து கெட் டூ கெதரில் கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள்...........

37 ஆண்டுகள் கழித்து  கெட் டூ கெதரில் கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள்...........
Published on
Updated on
1 min read


37 ஆண்டுகளுக்குப் பிறகு  ஒன்று கூடிய தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்.

மனதை உருக்கும் நிகழ்வுகளுடன் ஆடல், பாடலுடன் களைக்கட்டிய பெருவிழா. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தேயிலை செடிகள். தற்போது நீலகிரி மாவட்டத்தில் முதுகெலும்பாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. 

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்து பணிபுரிந்து வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு தனியார் தேயிலை தோட்டங்களை வாங்கிய உரிமையாளர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் குடிப்பெயர்ந்து சென்றனர்.

அதன்படி உதகையை அடுத்த மேல் டெரோமியா தேயிலை எஸ்டேட் பகுதியில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்து வந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒன்று கூடும் பெருவிழாவை நடத்தினர். இந்த ஒன்று கூடும் பெருவிழாவில் தாராபுரம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு இடையில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்டோர் தங்களது மகன், மகள், மருமகன், பேரன், பேத்தி என குடும்பங்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தங்களது சொந்த மண்ணில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் ஒன்று கூடிய தருணத்தில் தங்களது பழைய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் அனைவரும் ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்தனர். தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உதகையில் ஒன்று கூடிய சம்பவம் அனைவரையும் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com