மனைவியிடம் கணவரை ஒப்படைத்த விமான நிலைய அதிகாரிகள்!

துபாயில் இருந்து சென்னைக்கு வந்தவர் மாயம் என மனைவி புகாரளித்ததை அடுத்து திருப்பதி சென்றவரை வரவழைத்து ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியுள்ளது.
மனைவியிடம் கணவரை ஒப்படைத்த விமான நிலைய அதிகாரிகள்!
Published on
Updated on
1 min read

சென்னை: கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு வயது 35. இவர் கேட்டரிங் டெக்னாலஜி படித்ததால் துபாயில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் கடந்த 19ந் தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக அவரது மனைவி காவியாவுக்கு கூறியிருந்தாா். ஆனால் வீட்டிற்கு நீண்ட நேரமாகியும் கணவர் வராததால் செல்போனிற்கு தொடர்பு கொண்டார். அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து காவியா  சென்னை விமான நிலையத்திற்கு வந்து விமான நிலைய மேலாளரிடம் கூறி பயணிகள் வருகை பதிவெட்டை  பார்த்தார். அப்போது மணிகண்டன் விமானத்தில் வந்து வெளியே சென்று விட்டதாக தெரிவித்தனர். இதனால்  கணவரை காணாமல் அதிர்ச்சி அடைந்த  காவியா சென்னை விமான நிலைய போலீசில் புகாா் செய்தாா்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி விசாரித்தார். அப்போது மணிகண்டனின் நண்பரை தொடர்பு கொண்டு விசாரித்த போது 19ந் தேதி வந்து தனது அறையில் ஒய்வு எடுத்து விட்டு திருப்பதி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார் என கூறினார். அவரது உடமைகளும் நண்பர் அறையில் இருந்தது.

பின்னர் உடமைகளை போலீசார் கைப்பற்றினார்கள். திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய மணிகண்டன் விமான நிலைய போலீசார் முன் ஆஜரானார். போலீசார் அறிவுரை கூறி மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com