"78 மத்திய பாஜக அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை" அண்ணாமலை!!

"78 மத்திய பாஜக அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை" அண்ணாமலை!!

ஆங்கிலேயரும், திமுகவினரும் பல்வேறு பொய்களை 70 ஆண்டுகளாக சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கொடைக்கானல் நாயுடுபுரத்திலிருந்து பேரணியாக சென்று, மூஞ்சிக்கலில் அருகே பிரச்சார வாகனத்தில் இருந்து உரையாற்றியுள்ளார். அப்பொழுது, ஆங்கிலேயரும், திமுகவினரும் பல்வேறு பொய்களை 70 ஆண்டுகளாக சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என சாடியுயள்ளார். 

மேலும், "இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜி 20 மாநாட்டில் இந்தியாவிற்கு தேவையானவை என்ன என்பதை மையப்படுத்தி உலக நாடுகளின் தலைவர்களை வரவழைத்து மிகச் சிறப்பான மாநாட்டை நடத்தினார். பாரதிய ஜனதா சார்பில் 78 மத்திய அமைச்சர்கள் இருந்தும் இன்று வரை ஒரு ஊழல் குற்றச்சாட்டுகள் கூட அவர்கள் மீது இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அளவில் ஊழல் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தவர் லல்லு பிரசாத் யாதவ், இதில் விஞ்ஞான ஊழலை எப்படி செய்வது என்று கற்றுக் கொடுத்தது திமுக, இந்தியாவிலேயே மதத்தை பிளவுபடுத்தி ஆட்சி செய்பவர் மம்தா பானர்ஜி இவர்கள் எல்லாம் இணைந்தது மொத்த ஊழல் இந்தியா கூட்டணி என விமர்சித்துள்ளார்.

மேலும், " இவர் தினசரி மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் செய்வதற்காகவே தமிழகம் பெற்ற கடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.முப்பதாயிரம் கோடி ஊழல் செய்துள்ளதை அவரது அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனே கூறியுள்ளார்"  எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் மீது அனைத்து தரப்பு மக்களுக்கும் முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்கள் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியே ஆட்சி செய்வார். ஊழல் கூட்டணிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்" என பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com