நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
 
இது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே 600 கீ.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 670 கீ.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக பாலசந்திரன் கூறினார். 

இதையும் படிக்க: சவுராஷ்டிரா மக்களை குறிவைக்கும் பிரதமர் மோடி...நேரடியாக களத்தில் குதித்து பிரச்சாரம்..!

மேலும் இந்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களை நாளை மற்றும் நாளை மறுநாள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.