இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை...!!! 

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை...!!! 

சென்னை நகரம் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக தேசிய குற்ற பதிவு ஆவண காப்பகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை இயக்குனர் தலைமையில் பெருநகர சென்னை காவல்துறை இயங்கி வருகிறது. 5 கூடுதல் காவல் ஆணையாளர்கள், ஏழு காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் 31 காவல் துண ஆணையாளர்கள் ஆகியோர் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். 102 உள்ளூர் காவல் நிலையங்கள், 37 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 56 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 24 தனி பிரிவுகளுடன் 23,791 காவலர்கள்  சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல்துறையில் 7 காவல் நிலையங்கள் மதிப்புமிக்க ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றுள்ளன. நேர்மையான அர்ப்பணிப்பு மற்றும் சீரிய காவல் பணி ஆகியவற்றின் காரணமாக சென்னை நகரம் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக தேசிய குற்ற பதிவு ஆவண காப்பகத்தால் அறிவிக்கப் பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் கலைஞர்...!!