போதிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டப்படும் தேங்காய் மட்டைகள்

போதிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டப்படும் தேங்காய் மட்டைகள்

 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் சுமார் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. வைகை ஆற்றின் இருகரைகளையும் ஒட்டி ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. தென்னை மரங்களில் இருந்து 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்படுகிறது.

மேலும் படிக்க |திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்- காரணம் இதோ

தேங்காய்கள் உரிக்கப்பட்டு மூடைகளில் கட்டி மும்பை, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்படுகிறது. மற்ற பகுதி காய்களை விட திருப்புவனம் பகுதி தேங்காய்களில் எண்ணை சத்தும் அதிகம், ரூசியும் அதிகம் என்பதால் வெளிமாநிலங்களில் விரும்பி வாங்குகின்றனர். ஒரு தேங்காய் பத்து ரூபாய் என்றும் கிலோ கணக்கில் 25 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டது. தேங்காய்கள் உரிக்கப்பட்ட பின் கிடைக்கும் மட்டைகள் சோழவந்தான், கரூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்படுகிறது. மட்டைகளில் இருந்து கயிறு, மஞ்சி (வெளிநாடுகளில் செடி வளர்ப்பதற்கு தொட்டிகளில் போட்டு வைப்பதற்கு பயன்படுத்துவது) உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்படுகிறது.

விலை பெருமளவு சரிவு

ஒரு லோடு தென்னை மட்டைகள் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்தாண்டு தொடர் மழை காரணமாக விளைச்சல் அதிகரித்ததால் விலை பெருமளவு சரிந்து விட்டது. ஒரு தென்னை மரத்திற்கு 20 தேங்காய்கள் வரை கிடைத்த நிலையில் தற்போது 50 தேங்காய் வரை கிடைத்ததால் விலை பெருமளவு சரிந்து விட்டது. 10 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட தேங்காய்கள் தற்போது ஐநது ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் மட்டைகளை வாங்க ஆளில்லாததால் மட்டைகளை குப்பைகளில் கொட்டி வருகின்றனர். தென்னை மரங்களில் இருந்து தேங்காய் ஓடுகளை ஊதுபத்தி தயாரிக்கவும், மட்டைகளில் இருந்து கயிறு தயாரிக்கவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் விசிறி, தட்டி உள்ளிட்டவைகளும் தயாரிக்கப்படுகின்றன. தென்னை விவசாயிகளுக்கு தேங்காய் மட்டுமல்லாது உபரி பொருட்கள் மூலமும் வருவாய் கிடைத்து வந்தது.

மேலும் படிக்க | இபிஎஸ் மீது வழக்கு பதிவு: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேங்காய்கள் வெட்டப்படாமல் மரத்திலே இருக்கு 

தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும் விளைச்சல் அதிகம் என்பதால் விலை சரிந்து விட்டது. இதனால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். விலை சரிவால் பல இடங்களில் தேங்காய்கள் வெட்டப்படாமல் மரத்திலேயே காய்த்து தொங்குகின்றனர். திருப்புவனத்தை மையப்படுத்தி கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்தால் மட்டுமே தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும், தமிழக அரசு திருப்புவனத்தை மையப்படுத்தி கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.