தொடரும் கனிம வளக்கொள்ளை....! தீர்வு காணுமா அரசு...?

தொடரும் கனிம வளக்கொள்ளை....! தீர்வு காணுமா அரசு...?

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கேரளாவிற்கு கனிம வளங்களானது எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படும் கனிம வளங்கள்

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம், ஆலங்குளம், கடையநல்லூர், செங்கோட்டை, பண்பொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்களானது கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், இந்த கனிம வள லாரிகள் அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றி செல்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கிரானைட், கனிம மணல் கொள்ளை குறித்து சகாயம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு -  BBC News தமிழ்

அதனை தொடர்ந்து, போலீசார் தங்களது சோதனையை தீவிரப்படுத்தி அதிக பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகளை பிடித்து அபராதம் வீத்தனர்.

இருந்த போதும், சில ராட்சத லாரிகள் மூலம் கனிம வளங்களானது அளவுக்கு அதிகமாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த லாரிகளால் அதிகப்படியான விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகும் தொடர் புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் கனிம வள லாரிகள் அனைத்தையும் மறித்து 10 டயர்களுக்கு கீழ் உள்ள லாரிகளை மட்டுமே போலீசார் கேரளாவிற்கு அனுமதித்து வருகின்றனர்.

இதையும் படிக்க    } "ஜாதியை தூக்கிப்பிடிப்பவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை" அமைச்சர் மெய்யநாதன்.

அதேபோல், 10 டயர்களுக்கு மேல் உள்ள லாரிகள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

Tamil News | கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல்; கோவையில் 18 லாரிகள்  சிறைபிடிப்பு | Dinamalar

குறிப்பாக, 42 டன் அளவுடைய பாரத்தை மற்றும் தாங்க கூடிய இந்த தேசிய நெடுஞ்சாலையில் 50 டன்களுக்கு மேலாக சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்டு வருவதால் சாலைகள் சேதமாவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்தும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க    } "திமுகவின் ஊழலை மறைப்பதற்கே அமைச்சரவை மாற்றம்" ராஜன் செல்லப்பா..!!