
பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு, தமிழக பாஜகவின் புதிய தலைவராக கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
இதனிடையே, அண்ணாமலையை வரவேற்கும் விதமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் பா.ஜ.க. சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் கொங்குநாட்டின் வருங்கால முதல்வரே என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.