
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் கடனை திருப்பி செலுத்தாத திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான இடத்தை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.
நிலத்தை வைத்து கடன் வாங்கிய திமுக எம்பி:
திமுக எம்.பி ரமேஷூக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் பண்ருட்டி - சென்னை சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலத்தின் ஆவணங்களை வைத்து எம்.பி. சுரேஷ், பண்ரூட்டியில் உள்ள தனியார் வங்கியில் 45 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
நீதிமன்றம் உத்தரவு:
ஆனால், அவர் கடனை முறையாக செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்துவந்த நிலையில், தற்போது அந்த இடத்தை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜப்தி செய்த வங்கி அதிகாரிகள்:
தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வங்கி அதிகாரிகள் திமுக எம்.பி. ரமேஷூக்கு சொந்தமான இடத்தை ஜப்தி செய்தனர்.