திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தீவிரவாதம் தலையெடுக்கிறது - டிடிவி தினகரன் விமர்சனம்!

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தீவிரவாதம் தலையெடுக்கிறது - டிடிவி தினகரன் விமர்சனம்!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர்  டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

டிடிவி தினகரன் மரியாதை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தேவரின் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர்  டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

இதையும் படிக்க: ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகளை ஆளுநராக நியமிப்பதை முதலில் நிறுத்த வேண்டும் - சீமான் காட்டம்!

திமுக ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் தலையெடுக்கும்:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் தீவிரவாதம் தலையெடுப்பதாக விமர்சித்தார்.

ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டு:

மேலும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் யாரும் பேனர் வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஆளும் கட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.