உள்ளேன் அய்யா' என இருப்பை காட்டிக்கொள்ள இபிஎஸ் அறிக்கை வெளியிடுகிறார் - திமுக அமைச்சர்

உள்ளேன் அய்யா' என இருப்பை காட்டிக்கொள்ள இபிஎஸ் அறிக்கை வெளியிடுகிறார் - திமுக அமைச்சர்

தமிழ்நாட்டில் மாநில வாணிபக் கழகத்தினால் 101 வணிக வளாகங்களின் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. சில்லறை விற்பனைக் கடையின் விற்பனையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

எடப்பாடி கே பழனிசாமி வாழ்க்கை வரலாறு: வெல்ல வியாபாரம் டு முதல்வர் பதவி -  முழுமையான தொகுப்பு | Tamilnadu CM edappadi palanisamy Biography - Vikatan

இதனைத் தொடர்ந்து 4 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மட்டும் கடைக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை எந்திரம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் திணறல்

அதேபோல், கடைக்கு உள்ளேயே தானியங்கி ஏந்திரம் இருப்பதால் கடை பணியாளர்களின் முன்னிலையிலேயே விற்பனை செய்யப்படும். இதனால் 21 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாதுமேலும் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே தானியங்கி மதுபான விற்பனை எந்திரத்தைச் செயல்படுத்த முடியும் எனவும் தெளிவான அறிக்கை ஒன்றை மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஏதோ புதிதாக வணிக வளாகங்களில் மதுபான கடைகளில் இருப்பதுபோல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில் மதுபான தானியங்கி எந்திரம், மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட தமிழ்நாடு அரசுக்கு இல்லையா?” என குற்றம்சாட்டியுள்ளார்.

இவரின் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதெனத் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், 'உள்ளேன் அய்யா' என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பழனிசாமி" என தெரிவித்துள்ளார்.