வேட்பு மனு தாக்கல் செய்யும் இபிஎஸ்..!!

வேட்பு மனு தாக்கல் செய்யும் இபிஎஸ்..!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா். 

கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.  இதனை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்பின் மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் என்பது உறுதி செய்யப்பட்டது. 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதனையடுத்து தோ்தலில் போட்டியிட விருப்பமுள்ளோா் இன்றும், நாளையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.  

இதையும் படிக்க:   எண்ணும், எழுத்தும்... தொடங்கி வைத்த அமைச்சர்..!!