கொடி கட்டி பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனை...!

கொடி கட்டி பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனை...!
Published on
Updated on
2 min read

சென்னையில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கள்ளத்தனமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே ஒவ்வொரு தெருக்களிலும்  விற்பனை நடைபெற்று வருகிறது.

மேலும் போரூர், பூந்தமல்லி, கிண்டி, எம் எம் டி ஏ, வடபழனி,  பாடி, உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஒருசில இடங்களில் காவல்துறை நெருக்கடி காரணமாக டிஜிட்டல் மூலமாகவும் லாட்டரி எண்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுவாக தங்களது தொலைபேசியில் மூன்று இலக்க எண்கள், நான்கு இலக்கு எண்களை பதிவு செய்து அதற்கு ஏற்றது போல் கூகுள் பே மூலமாக பணம் அனுப்பி மறுநாள் வெற்றி தோல்வியை மீண்டும் டிஜிட்டல் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது, தற்போது லாட்டரி விற்பனை  புதிய வடிவம் பெற்றுள்ளது.

இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் கூலி தொழிலாளிகள் ஏராளமானோர் தாங்கள் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக இந்த லாட்டரி சீட்டு வாங்கி தங்களது பொருளாதாரத்தை இழந்து வருகின்றனர் இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் காவல்துறை சரியான நடவடிக்கைகள் இல்லை என தெரியவருகிறது.

இதையும் படிக்க     | அதானி விவகாரம்: காங்கிரஸின் கேள்விகள் புத்தகமாக வெளியீடு!
 
இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரியிடம் கேட்ட பொழுது அங்கங்கே ஒருசில இடங்களில் இது போன்ற தகவல் வருகிறது. அதற்கு ஏற்றது போல அந்தபகுதியில் இருக்கக்கூடிய காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com