'மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை' செயலாளராக பொறுப்பேற்றார் -ககன் தீப் சிங் பேடி...!!

'மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை' செயலாளராக பொறுப்பேற்றார் -ககன் தீப் சிங் பேடி...!!

Published on

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி சென்னை தலைமைச்  செயலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ககன் தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்தார். 1993ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கிய ககன் தீப் சிங் பேடி, குமரி மாவட்ட ஆட்சியராகவும், மதுரை, கோவையில் ஆணையராகவும் பணியாற்றினார்.

2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி மேற்கொண்ட நிவாரணப்பணிகள் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. 2015ம் ஆண்டு வெள்ளத்தின் போது கடலூர் மாவட்டத்தில் ஒரு மாத காலம் இரவு பகல் பாராமல் பணியாற்றி, விரைவில் நிலைமை சீரடைய உதவினார். இதனைத் தொடர்ந்து வர்தா, ஒக்கி புயல் பாதிப்பின் போதும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இவரே நியமிக்கப்பட்டார். கஜா புயலின் போதும் சிறப்பாகப் பணியாற்றினார்.

கொரோனா தொற்று, சென்னை பெருமழை வெள்ளம் என தலைநகரில் துயரங்கள் தொடர்ந்த நேரத்தில், அவற்றிலிருந்து மக்களைக் காப்பதில் ககன் தீப் சிங் மிகச்சிறப்பாகப் பணியாற்றினார். எந்த துறையை கொடுத்தாலும் அதில் சிறப்பாக செயல்படகூடியவர் என்ற பெயர் பெற்ற ககன் தீப் சிங் பேடி தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com