இப்படியும் உயிர் போகுமா...கர்ணம் அடித்த கபடி வீரருக்கு மரணம்..! வைரலாகும் வீடியோ...!!

இப்படியும் உயிர் போகுமா...கர்ணம் அடித்த கபடி வீரருக்கு மரணம்..! வைரலாகும் வீடியோ...!!

கபடி பயிற்சியின் போது கரணம் அடித்த கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கபடி வீரருக்கான பயிற்சி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில், கடந்த 8ஆம் தேதியன்று மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சியை மேற்கொண்டனர். பயிற்சியின் போது ஏராளமான கபடி வீரர்கள் கலந்துகொண்டனர். 

கபடி வீரர் வினோத் குமார்:

களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் நடத்திய கபடி பயிற்சியில், ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவை சேர்ந்த கபடி வீரர் வினோத் குமார் என்பவர் கலந்து கொண்டு பயிற்சி செய்து வந்தார். 

கரணம் அடித்த வினோத் குமார்:

வினோத் குமார் கரணம் அடிக்கும் பயிற்சியை மேற்கொண்டார். அந்த பயிற்சியின்போது, கரணம் அடித்த வினோத் திடீரென மயங்கி கீழே விழுந்தார். 

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/tamilnadu/Kabaddi-player-died-on-the-field-while-playing-Kabaddi-parents-are-left-speechless

மருத்துவமனையில் அனுமதி:

மயங்கி கீழே விழுந்த வினோத்குமாரை, உடனடியாக சக கபடி வீரர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

சென்னைக்கு வந்த வினோத்:

ஆரணி மற்றும் மேலூர் மருத்துவமனையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

உயிரைவிட்ட வினோத் குமார்:

மேல் சிகிச்சைக்காக சென்னை வந்த கபடி வீரர் வினோத் குமார், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். கபடி வீரர் வினோத் குமாருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், கபடி பயிற்சியில் வினோத் குமார் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கபடி வீரர் கரணம் அடிக்கும் காட்சி தற்போது சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகின்றன.

விமல் ராஜ் VS வினோத் குமார்:

முன்னதாக, கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில், கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி, கபடி வீரர் விமல் ராஜ் என்பவர் கபடி விளையாடி கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். தற்போது இதே போன்று, ஒரு சம்பவம் திருவண்ணாமலை ஆரணியில் நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.