மதுபானம் கொள்முதல்: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

மதுபானம் கொள்முதல்:   டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

மதுபானங்கள் கொள்முதல் தொடர்பான விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு கோருவது குறித்து பதிலளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய், மது கொள்முதல் விலை உள்ளிட்ட விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தர மறுத்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

Tasmac authorities face re-deployment issues of staff from closed outlets

இவ்வழக்கின் விசாரணையின் போது மூன்றாவது தரப்பின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் தகவல் உரிமைச் சட்டப்பிரிவின்படி இந்த தகவல்களை வழங்க முடியாது என டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், உரிய விளக்கமளிக்க டாஸ்மாக் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

இதையும் படிக்க   | மதுபானங்களின் விலை இன்று முதல் அதிரடி உயர்வு...! -