300 மரங்களை வேரோடு புடுங்கி எறிந்த மாண்டஸ்.. படங்கள் உள்ளே..!

நேற்றிரவு பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

300 மரங்களை வேரோடு புடுங்கி எறிந்த மாண்டஸ்.. படங்கள் உள்ளே..!

கரையை கடந்த மாண்டஸ் 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, பின்னர் புயலாக வலுவடைந்தது, அப்புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. நேற்று இரவு 9 மணி முதல் மெதுவாக கரையைக் கடக்கத் தொடங்கிய மாண்டஸ் புயல் அதிகாலை 3 மணி அளவில் பலத்த காற்றுடன் கரையை கடந்தது.

புயல் சேதங்கள் 

சென்னையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பெசன்ட் நகர், போரூர், வடபழனி, அசோக் பில்லர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை மற்றும் பெரம்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் 300 மரங்களை சாய்த்துள்ளது மாண்டஸ். கடற்கரை பகுதியில் இருந்த கடைகள் காற்றின் வேகத்தினால் சேதமடைந்துள்ள நிலையில் கடற்கரை சாலைகள் முழுவதும் மணலால் மூடப்பட்டுள்ளது.

பதிவான மழை

நேற்றிரவு பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 மில்லிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 103 மில்லிமீட்டரும், திருவள்ளூரில் 83 மில்லிமீட்டரும், மாதவரத்தில் 87 மில்லிமீட்டரும் மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: மாண்டஸ் புயலால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா...? அமைச்சர் விளக்கம்

வானிலை மையத்தின் கணிப்பு 

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் படி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.