கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்கள்...! அதிமுக சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்க வேண்டும்...!

 கேரளாவிற்கு கடத்தப்படும்  கனிம வளங்கள்...!  அதிமுக சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்க வேண்டும்...!
Published on
Updated on
1 min read

கனிம வளங்கள்  கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதற்கு எதிராக அதிமுக சார்பில் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி. ராஜேந்திரன், அவைத் தலைவர் சண்முகசுந்தரம்  மற்றும் ஒன்றிய செயலாளர் அதிமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதற்கு எதிராக அனைத்து கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில்  அதிமுகவும் போராட்டங்களை   என முடிவு செய்யப்பட்டது. 

சமீபத்தில் கூட கனிம வளங்கள்  ஏற்றி செல்லும் லாரிகள் மூலம் விபத்துக்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாகவும் ஆளும் கட்சியை செங்கோட்டையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் கனிம வளங்களுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பிரிவு மூலம் பொதுநல வழக்கு தொடங்கப்பட உள்ளது எனவும் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்தார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ -வும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான  கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பேசுகையில்,  அதிமுக ஆட்சியின் பொழுது கனிம வளங்கள் ஒரு யூனிட் கூட  கேரளாவிற்கு கடத்தப்படவில்லை என்றும் ஆனால் தற்பொழுது தினமும் 4500 முதல்  5000 யூனிட் வரை கனரக லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் கூறினார். 

மேலும்,  இதனால் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, விரைவில் அதிமுக சார்பில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் தென்காசி மாவட்டத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com