"நீட் விலக்கு; உச்சநீதிமன்றம் தான் செல்ல வேண்டும்" சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுரை!

"நீட் விலக்கு; உச்சநீதிமன்றம் தான் செல்ல வேண்டும்" சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுரை!

நீட் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்று கூறியது உச்ச நீதிமன்றம். எனவே நீட் தேர்வில் விலக்கு வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என ஜார்க்கண்ட் ஆளுநர்   சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருத்தணியில் உள்ள சுப்ரமணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறுயதாகவது, நீட் ஒரு பிரச்சினையாக்கப்படுகிறது. நீட் என்பது யாரால் கொண்டுவரப்பட்டது என்பது தேர்தலுக்கு முன்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நன்றாகவே தெரியும். இப்பிரச்சனையில் சிலர் தற்கொலை செய்து கொள்வதை பெரிதுபடுத்தி, அதை ஒரு அரசியல் பிரச்சினையாக்கி, அதன் மூலமாக வாக்குகளை பெற வேண்டும் என்று அதனை செய்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும், இதில் பதில் கூற வேண்டியது மத்திய அரசு அல்ல. இதில் பதில் கூற வேண்டியது தமிழ்நாடு ஆளுநர் அல்ல. இதில் பதில் சொல்ல வேண்டியது திராவிட முன்னேற்றக் கழகம் தான் எனக் கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த ஒரு நாடகம் என்று கூறினார்.  நீட் தேர்வில் உயிர் இழப்பு என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.  அதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார்.

ஜார்கண்ட் மாநில அரசு கூட நீட் தேர்வுக்கு தனியாக இலவச கோச்சிங் சென்டர்களை நடத்தி வருகிறது எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு அரசு வருமானத்தில் இதை நடத்த முடியாதா என்று கேள்வி எழுப்பினார். தமிழக மாணவர்கள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லை எனக் கூறிய அவர், நீட் தேர்வில் மத்திய அரசு பங்கு என்ன இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

இது தமிழ்நாடு கவர்னர் பங்கு என்ன இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய சிபி ராதாகிருஷ்ணன், நீட் தேர்வை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியது உச்ச நீதிமன்றம் என்றும், இவர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசு செல்ல வேண்டியது உச்சநீதிமன்றம் தானே என்று ஆளுநர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க:காதலனை நம்பிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!