"எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை " நாராயணன் திருப்பதி கண்டனம்!

"எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை " நாராயணன் திருப்பதி கண்டனம்!
Published on
Updated on
1 min read

பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யாவை கைது செய்தது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை  என பாஜக மாநில துணை தலைவர்  நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக மாநில செயலாளர்  எஸ் ஜி சூர்யா  கைது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர்  நாராயணன் திருப்பதி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒவ்வொரு மாவட்டமாக ஒவ்வொரு காவல் நிலையமாக  தேடித்தேடி பாஜகவினர் மீது வழக்கு போடப்பட்டு வருகிறது.  மு க ஸ்டாலினுடைய திமுக அரசு காவல்துறையை உபயோகித்து பாஜகவினரை வேண்டுமென்றே திட்டமிட்டு மிரட்டி பார்க்கிறது. இந்த மிரட்டலுக்கு பாஜக  அஞ்சுவது கிடையாது. ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக பாஜக கேள்வி கேட்கும்,  அதற்கு பதில் கூற வேண்டும். அதை விட்டு கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சியினுடைய தவறான புகார்களுக்கு எல்லாம் பணிந்து வேண்டுமென்று திட்டமிட்டு பாஜக தொண்டர்களையோ நிர்வாகிகளையோ அடக்க நினைப்பது கைது செய்வது என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாஜக யார் என்று திமுகவினருக்கு உணர்த்த நேரிடும் என தெரிவித்தார். 

திமுக யார் என்று ஸ்டாலின் கேட்கிறார். நரேந்திர மோடி என்று சொன்னாலே உலகமே அதிரக்கூடிய, ஆர்ப்பரிக்க கூடிய,  அகமகிழக் கூடிய ஒரு நிலை இந்த நாட்டிலே இருக்கிறது. எங்களுக்கு சவால் விடுவது என்பது தேவையற்ற விஷயம். ஆட்சியை முறையாக நடத்த வேண்டும். இதுபோன்று தேவையற்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது எனக் கூறினார்.

மேலும் கைது  செய்திருக்கக்கூடிய அனைத்து பாஜகவினரையும் விடுதலை செய்ய வேண்டும்.  அடிமட்ட தொண்டர்களுக்கு ஆதரவாக தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக குரல் கொடுத்த எஸ் ஜி சூர்யா அவர்களையும் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட பாஜகவினரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

பாஜக வினர் மீது தேவையற்ற வழக்குகளை பதிந்து இருக்கின்றனர். கைது செய்துள்ள அத்தனையும் பழிவாங்கும் நடவடிக்கை எனக் குற்றம் சாட்டிய அவர்,  திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை 100 பாஜகவினரை கைது செய்து உள்ளதாகவும் கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர், திமுகவினரை சீண்டி பார்க்காதீர்கள் என மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார், இப்போது நான் கூறுகிறேன் பிஜேபியினரை சீண்டி பார்க்காதீர்கள் எங்களை சீண்டி பார்த்தால் அதனுடைய விளைவை திமுக உறுதியாக அனுபவிக்கும் என கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com