பால்வளத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்ட புதிய 48 அறிவிப்புகள்...!!!

பால்வளத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்ட புதிய 48 அறிவிப்புகள்...!!!

இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  அதனை தொடர்ந்து ஆளுநர் மீதான உரையின் காரணமாக சட்டமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி  வைக்கப்பட்டது.

அதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  தொடர்ந்து சட்டப்பேரவையில் அமைச்சர்கள் திட்டங்கள் அதன் மீதான விவாதங்கள் கேள்விக்கு பதில்கள் போன்றவை நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் 48 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  அவை பின்வருமாறு:

1. கலைஞர் சங்க பணியாளர்கள் நலநிதி உருவாக்கப்பட்டு தொடக்க வாழ் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களின் நலன் பேணப்படும்

2. தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடன் மூலம் ரூபாய் 2 லட்சம் புதிய கறவை மாடுகள் வாங்க நபார்டு வங்கி கிளை நிறுவனத்தின் கடன் உத்திரவாத திட்ட உதவியுடன் ஆவின் பால் பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும்

3. ஆவின் இனிய பால்பண்ணைகளில் பால் பக்கெட்டிகள் தயாரித்து கையாலும் பணி 30 கோடி ரூபாய் செலவில் தானியங்கி இயந்திரம் நிறுவுவதன் மூலம் நவீனப்படுத்தப்படும்

4.கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் புதிய கால்நடை தீவன ஆளை நிர்வாக 25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்

5. எருமை வளர்ப்பை ஊக்குவிக்க எருமைக்கன்று வளர்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

6. பால் உற்பத்தியாளர்களுக்கு தாங்கள் வழங்கும் பாலில் தரத்திற்கு ஏற்ப உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கப்படும்

7. தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்தல் கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள நலநிதி பணிகள் கணினி மையமாகப்படும் 

8. ஒரு லட்சம் பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பணியாளர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்

9. புதிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வண்ணம் தேசிய பால் பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும்

10. ஆவின் நுகர்வோர்களுக்கு மாதாந்திர பாலட்டை விற்பனை மற்றும் புதுப்பிக்கப்படும் பணிகள் கணினி மையம் ஆக்கப்படும்

11 ஆவின் ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும்

12. பால் உற்பத்தியாளர்களின் 5 லட்சம் கறவைகளுக்கு 50% மானியத்தில் தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யப்படும்

13. தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உருவாக்கப்படும் மேலும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி ஒழுங்குமுறை மற்றும் பால் கூட்டுறவு சட்டம் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

14.  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாற்று மின்சாரமாக பயன்படுத்தப்படும்

15. புதிய திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக ஆவின் நிறுவனம் புதிய பிரிவு 8 நிறுவனம் உருவாக்கப்படும்

16. புதிய சாக்லேட் உற்பத்தி அலகு அம்பத்தூர் பால்பண்ணை வளாகத்தில் நிறுவப்படும்

17. புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் வசதி ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்

18. ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் பால் குளிரீட்டும் நிலையவளாகத்தில் 25 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் வசதி ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்

19. சூரிய சக்தி மூலம் பால் கேன்களை குளிர்விக்கும் இயந்திரங்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அளவில் நிறுவப்படும்

20. ஈரோடு சத்தியமங்கலத்தில் பசுந்தீவன குச்சிகள் தயாரிக்கும் ஆலை ரூபாய் 6.75 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்

21. தஞ்சாவூர் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பசுந்தீவன புல் விதைகள் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும்

22. நீலகிரியில் உள்ள ஆவின் உரை விந்து உற்பத்தி நிலையத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் அஞ்சு புள்ளி 46 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்

23. நீலகிரி மாவட்ட ஒன்றிய பால் பண்ணை புணரமைப்பு பணிகள் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் ( மலை மாவட்டம் மாவட்டமான நீலகிரியில் உள்ள பால் உற்பத்தி மற்றும் விற்பனை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் அவசியத்தை கருதி சிறப்பு பகுதி வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து நீலகிரி மாவட்ட ஒன்றியத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் பால்பண்ணை கட்டிடங்கள் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் புனர்பிக்கப்படும் மேலும் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரிக்க குளிர்சாதன வாகனம் கொள்முதல் செய்யப்பட்ட செய்து தரப்படும்

24. தூய பால் உற்பத்தியை உறுதி செய்ய தேசிய பால்வள மேம்பாட்டு திட்ட நிதி மூலம் ரூபாய் 8.75 கோடி மதிப்பீட்டில் கிராமப்புற ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்

25. தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டடங்கள் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் 100 சங்க கட்டிடப் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும்

26. தரமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குழுவிற்கு மைய செயலாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் ( மாவட்ட ஒன்றியங்கள் தோறும் சிறப்பாக செயல்படுகின்ற சிறந்த பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் 2 கோடி அளவில் ரொக்க பரிசு வழங்கப்படும் )

27. நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் வகைகள் மற்றும் பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்

28. ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு இணைய வலி விற்பனை வசதி ஏற்படுத்தப்படும்

29. காஞ்சிபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதியதாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்

30. திருவாரூரை தலைமை இடமாக கொண்டு புதியதாக திருவாரூர் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்

31. மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் 50 புதிய நவீன பாலகங்கள் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டிலும் சென்னை மாநகரில் 30 ஏ வி எம் பாலகங்கள் புனரமைப்பு பணிகள் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும்

32. பால்வளத் துறையில் உள்ள பால் கூட்டுறவுகளுக்கென பால் கூட்டுறவு ஒன்றியம் அமைக்கப்படும்

33. மகளிர்  தொழில் முனைவோர்களுக்கான பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க சேலம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஒன்றிய பயிற்சி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 2.58 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

34. நீண்ட கால அடிப்படையில் ஆவின் நுகர்வோர்களின் எண்ணிக்கை விரிவுபடுத்துவோம், பால் பொருட்கள் விற்பனையினை அதிகரிக்க செய்யவும் நுகர்வோர் ஊக்குவிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்

35. கறவை மாடு வளர்ப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த கன்று பேரணிகள் நடத்தப்படும்

36. கறவைகளின் இனப்பெருக்க திறனை மேம்படுத்த சினை முட்டை ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

37. நீலகிரி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடை தீவனம் மற்றும் தாது உப்பு கலவை மானிய விலையில் வழங்கப்படும்

38. கறவை இனங்களில் மடி நோய் தடுப்பு மற்றும் புற ஒற்றுண்ணி தடுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

39. கறவை மாடுகளின் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க நுண்ணுற்று சத்துக்கலவை வழங்கப்படும்

40. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் இதர பால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு பயணம் அழைத்துச் செல்லப்படுவர்

41. பால் உற்பத்தியாளர்களின் கவவை மாடுகளின் மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்த கால்நடை மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும் 

42. சூரிய சக்தி மூலம் தண்ணீரை சூடேற்றும் கருவி 277 எண்ணிக்கையில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களில் ரூபாய் 2 கோடி மதிப்பில் நிறுவப்படும்

43. பால் உற்பத்தி திறன் பதிவு திட்டம் மேலும் 18 மாவட்ட ஒன்றியங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்

44. கறவை மாடுகளில் இன விருத்தி திறன் சார்ந்த தரவுகளை சேகரித்து ஆய்வு செய்ய தரவு ஆய்வகம் வருவாய் 50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்

45. பால்வளத்துறை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் அலுவலக பணிகள் கணினிமயமாக்கப்படும

46. பால் உற்பத்தியின் பல்வேறு கூறுகளை இளைய சமுதாயம் அறிந்து கொள்ள ஏதுவாக மாதவரம் பால்பண்ணை பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

47.ஆவின் களப்பணியாளர்களை ஒருங்கிணைத்து பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்

48. இடுபொருள் சேவைகள் மேம்படுத்தப்படும் பசுந்தீவன உற்பத்தியை மேம்படுத்த தேசிய விதை கழகத்தின் விநியோக உரிமம் பெறப்படும்.

இதையும் படிக்க:   கால்நடைகளை அட்சயபாத்திரம் எனப் புகழ்ந்த அமைச்சர்...!!