" ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை.." - டிடிவி தினகரன்.

" ஒரு டிடிவியும் ஒரு ஓபிஎஸ் இணைந்ததற்கு இப்படி ஏன் பதறுகிறார்கள்...? "

" ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை.."    -   டிடிவி  தினகரன்.

அம்மாவிற்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் ஓய மாட்டோம்  என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " ஒரு டிடிவியும் ஒரு ஓபிஎஸ் இணைந்ததற்கு இப்படி ஏன் பதறுகிறார்கள்...?" , எனக் கேள்வியெழுப்பினார். 
அதோடு, எடப்பாடி பழனிச்சாமிக்கு தான்  சொல்வதெல்லாம் தானும்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் -ம் நீண்ட கால நண்பர்கள் எனவும் இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் பிரிந்திருந்தோம் எனவும் தெரிவித்தார். 

மேலும், அம்மாவிற்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் ஓய மாட்டோம் எனவும், பணம் மூட்டையோடு திரிபவர்களை வீழ்த்தி அம்மாவின் இயக்கத்தை அம்மாவின் தொண்டர்களிடம் ஒப்படைப்போம் என்றும், அம்மாவின் இயக்கம் இன்றைக்கு ஒரு சில சுயநலவாதிகளின் கையில் சிக்கியுள்ளது எனவும் கூறினார். அதோடு, " பண பலத்தை மட்டும் நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்; அதை மீட்டெடுக்கும் பொறுப்பு என்னிடமும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-சிடமும் தொண்டர்களால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும்  அதனை நாங்கள் நிச்சயம் உறுதியாக நிறைவேற்றிக் காட்டுவோம் எனவும் உறுதியளித்தார். 

OPS meets Dhinakaran, says aim to retrieve AIADMK from 'selfish forces' -  India Today

மேலும், நான்காண்டுகள் பழனிச்சாமியின் துரோக ஆட்சியை பிடிக்காமல் மக்கள் திமுக ஆட்சியை உருவாக்கினார்கள்; ஆனால், திமுக ஆட்சி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு 60 மாதங்களில் வரக்கூடிய எதிர்ப்பு 24 மாதங்களில் வந்து கொண்டிருக்கிறது எனவும் கூறினார். அதோடு,  தான் திமுக வுடைய  ' B டீம் ' இல்லை என்றும், நடுநிலையாக நியாயமாக பேசுபவன் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசுகையில்,   ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் குருவியைப் போல 22 பேரை சுட்டுக் கொல்லப்பட்ட போது பழனிச்சாமி அன்று தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி இருந்தால் இன்று திமுக முதலமைச்சரை பார்த்து கேள்வி கேட்பதற்கு அருகதை இருந்திருக்கும் என்று விமர்சித்தார். 

பின்னர், தமிழக அரசாங்கத்தின் காவல்துறையின் மெத்தன போக்கால் 10க்கும் மேற்பட்ட உயிர்கள் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளதைக் குறிப்பிட்டு,  இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழ்நாட்டில் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் தற்போது போதை கலாச்சாரத்தால் மாணவர்கள் உட்பட அனைவரும் சீரழியும் நிலை உள்ளது என்றும் சாடிய அவர், இதனைத்  தடுத்து நிறுத்தும் விதமாக ஆட்சிப் பொறுப்பில் மீதி இருக்கும் காலத்திலாவது செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கை அதுதான் அமமுகவின் கோரிக்கை என்றும் கூறினார்.

மேலும், பன்னீர்செல்வம் 2017இல் பொதுக்குழு தீர்மானத்தின் ஒருங்கிணைப்பாளராக அனைவரும் ஏற்றுக்கொண்டனர் எனக் குறிப்பிட்டு, தற்போது தனது பண பலத்தால் நிர்வாகிகளைக்  கைக்குள் போட்டுக் கொண்டு பழனிசாமி ஓபிஎஸ் -ஐ கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார் என குற்றம்சாட்டினர். 

குறிப்பாக ஈபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது வட தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் 10.5% இட ஒதுக்கீடு அரசாணை அறிவித்தது போல  ஈபிஎஸ் உடன் இருக்கும் கட்சிக்காரர்களை ஏமாற்றுவதற்குதான் தேர்தல் ஆணைய உத்தரவுகள் பயன்படும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு என்பது தான் இறுதியாக உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்பது போல ஓபிஎஸ் இந்த வழக்கில் வெற்றி பெறுவார் என்றும், அம்மாவின் தொண்டர்கள் ஆதரவோடு ஈபிஎஸ்சின் பண பலத்தை வீழ்த்துவோம் என்றும் கூறிக்கொண்டார்.

இதையும் படிக்க     } " கருத்தியல் முரண்கள் இருந்தாலும்,... பாஜகவுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்..!" - திருமாவளவன்.

பின்னர், "அம்மாவின் மறைவிற்கு பிறகு  பழனிச்சாமியுடன் இருப்பவர்கள் சின்னம்மாதான் முதலமைச்சர் ,பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று சொன்னார்கள்" ; என்றும்,  "என்னை முதலமைச்சராகிய பின்பு நான் என்ன தவறு செய்தேன்:  என்னை பொது இடத்தில் வைத்து பதவி விலக சொன்னீர்கள் என்பதால் தான்  போராட்டம் நடத்தினேன்",  என தன்னிடம்  ஓ.பி.எஸ். தெரிவித்ததாகக் கூறினார். தன்னை நம்பாமல் பதவி விலக வேண்டும் என கூறியதாலும் ,தன்னை தனியாக அழைத்து சின்னம்மாவும், தானும்  கேட்டிருந்தால்  இந்த விவகாரம் பெரிதாக இருக்காது; அது போன்ற போராட்டம் நடத்தியதால் தான்  இது போன்ற தீய கும்பலிடம் அம்மாவிடம் இயக்கம் சிக்கிக் கொண்டுள்ளது என ஓபிஎஸ் தெரிவித்ததாகக் கூறினார். 

தேதி குறித்த ஓபிஎஸ்; கிளம்பும் எதிர்பார்ப்புகள் ! | nakkheeran

அதனால் அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். தன்னால் அதிமுகவுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ் விட்டு கொடுத்தார், அவர் நீக்கப்பட்டதற்கு பின்பு வேறு வழியில்லாமல் போராடினார் எனவும் கூறினார். மேலும், " நாங்கள் சுயநலத்துக்காக இணையவில்லை , அமமுக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு இணைந்து அம்மாவின் இயக்கத்தை  மீட்டெடுப்போம்: அதுதான் எங்கள் நிலைப்பாடு", என்று கூறினார்.  

அதையடுத்து, அமமுக தொடங்கி ஆறு வருடம் ஆகின்றது ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை என குறிப்பிட்டார்.  அதோடு,  8 மாவட்டங்களில் ஓபிஎஸ் நிர்வாக அமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், தாங்கள் ஏற்கனவே கூறியதுபோல  சி.பி.ஐ மற்றும் சி.பி.எம். போல செயல்படுவோம் எனவும், அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுத்த பிறகு ஒத்த மனதோடு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவிதர்.

இதையும் படிக்க     } விஷச்சாராய விவகாரம்...! 'மெத்தனால்' சப்ளை செய்த 5 போ் கைது .....!