ஒன்றரை லட்சம் புதிய உறுப்பினர்கள் திமுகவில் சேர்க்க - திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஒன்றரை லட்சம் புதிய உறுப்பினர்கள் திமுகவில் சேர்க்க - திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழக முதலமைச்சரின் உத்தரவுபடி சேலம் மேற்கு மாவட்டத்தில் ஒன்றறை லட்சம் புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என சங்ககிரி வைகுந்தத்தில் நடைப்பெற்ற சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

சேலம் மாவட்டம் வைகுந்தம் சரவணபவன் மஹாலில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் - மத்திய ரயில்வே அமைச்சர்

அப்போது முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் தமிழக முதலமைச்சரின் உத்தரவுபடி சேலம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் ஒன்றறை லட்சத்திற்கும் மேலாக புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது மாவட்ட துணை செயலாளர்கள் சம்பத்குமார், சுந்தரம், மகுடஞ்சாவடி ஒன்றிய செயலாளர் பச்சமுத்து உட்பட நகர, ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.