யாருயா....இவங்களா....போடாத சாலைக்கு ரூ.1 கோடி கணக்காம்...!அதிர்ச்சியில் மக்கள்...!!

யாருயா....இவங்களா....போடாத சாலைக்கு ரூ.1 கோடி கணக்காம்...!அதிர்ச்சியில் மக்கள்...!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, போடாத சாலைக்கு கணக்குக் காட்டி, ஊராட்சிமன்ற அதிகாரிகள் ஒரு கோடி ரூபாயை சுருட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படை வசதிகள் கோரி மனு:

திருவள்ளூர் மாவட்டம், விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரியா நகர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் முறையான அனுமதி பெற்ற குடியிருப்பாகும். இங்கு சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருமாறு மதியழகன் என்பவர் தொடர்ந்து மனு அளித்துள்ளார். அரசுத்துறை அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிட்டனர். ஆனால் வேலைகள் எதுவும் நடக்கவில்லை.

கடிதத்தால் அதிர்ந்த மதியழகன்:

இந்தநிலையில், புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மதியழகனுக்கு கடிதம் வந்துள்ளது. அதில், தங்கள் கோரிக்கைப்படி ப்ரியா நகரில் ஒரு கோடி ரூபாய் செலவில் தரமான தார்சாலை அமைக்கப்பட்டு விட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து விசாரித்தபோது இதேபோன்ற கடிதம், திருவள்ளூர் மாவட்ட  ஆட்சியர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர், செயலர் உள்ளிட்டோருக்கும், அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்தது.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/Inauguration-of-the-Chief-Justice-of-the-Supreme-Court

அதிர்ச்சியில் கிராம மக்கள்:

இல்லாத ஊருக்கு சாலை போட்டதாக கணக்கு காட்டும் அதிகாரிகள், தற்போது போடாத சாலையையும் போட்டதாக கூறி, ஒரு கோடி ரூபாயை புழல் ஒன்றிய ஊராட்சி மன்ற அதிகாரிகள் சுருட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள பிரியா நகர் மக்கள், இந்த சம்பவம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.