"கா்நாடக மக்கள் மாற்றத்தை கொடுத்துள்ளனா்" - சீமான் பேட்டி.

"கா்நாடக மக்கள் மாற்றத்தை கொடுத்துள்ளனா்" - சீமான் பேட்டி.

மேகதாதுவில் அணை கட்டுவதாக காங்கிரஸ்,  பாஜக இரு தேசிய கட்சிகளும் கூறியுள்ளதால், கர்நாடக தேர்தலில்  யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் என  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பெட்டியில் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மேகதாதுவில் அணை கட்டுவதாக காங்கிரஸ்,  பாஜக இரு தேசிய கட்சிகளும் கூறியுள்ளதால், கர்நாடக தேர்தலில்  யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் என்றார்.

இதையும் படிக்க    } அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர்...!!

மேலும், கர்நாடகா தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதனை  பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்றும், கர்நாடகாவில் இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிவதால், கர்நாடக மக்கள் மாற்றத்தை கொடுத்துள்ளனர் என்றார். 

தொடர்ந்து, அண்ணாமலை ஆடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு, அண்ணாமலையை நல்ல ஆடியோ, வீடியோ வெளியீட்டாளராக பார்க்கின்றேன் என சீமான் தெரிவித்தார்.

இதையும் படிக்க    } ”தென் மாநிலங்களை போல்...வட மாநிலங்களிலும் பாஜக புறக்கணிக்கப்படும்...” அமைச்சா் சாமிநாதன்!