பாமக மாவட்ட செயலாளர் வண்ணை சத்யா வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

பாமக மாவட்ட செயலாளர் வண்ணை சத்யா வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சார்ந்த பாமக மாவட்ட செயலாளர் வண்ணை சத்யா வீட்டில்  மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அது மட்டுமின்றி அவரது மகன் நிஷாலை  ஐந்துக்கு மேற்பட்டோர் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது அப்பகுதி சார்ந்த இளைஞர்களுடன் சண்டையிட்டு இருக்கிறார் அவர்கள் தற்பொழுது பகை தீர்த்துக்கொள்ள நிஷாலை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.  நிஷால் தப்பி ஓடிய நிலையில் அவரது இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசி தங்களது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

இதையும் படிக்க    | பிரபல ரவுடி கல்லறை அப்பு வெட்டிக்கொலை; காவல் நிலையத்திற்கு பின் புறம் அரங்கேறிய கொடூரம்.!