இபிஎஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு... கண்டன ஆர்ப்பாட்டம்!!

இபிஎஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு... கண்டன ஆர்ப்பாட்டம்!!

எடப்பாடி பழனிச்சாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டித்து தேனியில் இ. பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது மதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் அவரது ஆதரவு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக  தேனி மாவட்டத்தில் இன்று அவரது ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ.வும்., அதிமுக அமைப்பு செயலாளருமான ஜக்கையன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  இதையடுத்து  முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மீது ஸ்டாலின் அரசு வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டித்து கண்டன கோசங்களை எழுப் பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில்,  இ. பி.எஸ்  ஆதரவு தேனி மாவட்ட அதிமுக ஒன்றிய, பேரூர், நகர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உறுப் பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து கோசங்களை எழுப் பினர்.

இதையும் படிக்க:  ஐந்தறிவு கொண்ட உயிரினத்திற்கு கூட .... பாஜகவை குறித்து...!!