
தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்கள் தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் கர்நாடக அணைகளில் உள்ள நீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்த பின் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்கள் தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 26ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.