மற்ற மத பண்டிகைக்கும் முதலமைச்சர் வாழ்த்து கூறக்கூடாது - சீமான் ஆவேச பேச்சு!

மற்ற மத பண்டிகைக்கும் முதலமைச்சர் வாழ்த்து கூறக்கூடாது - சீமான் ஆவேச பேச்சு!

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்ற மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கக் கூடாது என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளர்.

சீமான் மலர் தூவி அஞ்சலி:

சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி, அவரது படத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த நாட்டில், ஆர்.எஸ்.எஸ். நினைத்த இடத்தில் கூட்டத்தைக் கூட்டி வருவதாக, குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க: எடப்பாடியை மறைமுகமாக மிரட்டுகிறாரா ஸ்டாலின்?

சீமான் ஆவேசம்:

தொடர்ந்து பேசிய அவர், ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர், விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார். இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத முதலமைச்சர், மற்ற மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கக் கூடாது என ஆவேசமாக பேசினார். தேர்தலின்போது மட்டும் எம்மதமும் சம்மதம் என்று பேசும் நம் முதலமைச்சர், தற்போது ஏன் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்தினை தெரிவிக்காமல் இருக்கிறார். அப்போ, உங்களுக்கு இந்து மதம் மட்டும் ஏற்புடையது அல்லாமல் இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் முன்பு சீமான் ஆவேசமாக பேசினார்.