மூன்றாவது நாளாக கோடை மழை .... மகிழ்ச்சியில் விவசாயிகள்...!!

மூன்றாவது நாளாக கோடை மழை .... மகிழ்ச்சியில் விவசாயிகள்...!!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மூன்றாவது நாளாக கோடை மழை வெளுத்து வாங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.  

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. பல்வேறு பகுதிகளில் நூறு டிகிாி செல்சியசை தாண்டி வெயில் தாக்கியது. இதனால் பொதுமக்கள் பொிதும் அவதியடைந்து வந்தனா். இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கிய நிலையில் 3-வது நாளாகவும் மழை பெய்துள்ளது.

அதன்படி அரியலூர் நகர் பகுதியில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் இரவில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை பொதுமக்கள் ஆச்சாித்துடன் பாா்த்து ரசித்தனா். மேலும் தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து மகிழ்ந்தனா். 

இதேபோல் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனா்.  

இதேபோல் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வறட்சி நிலவி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பொிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. அப்போது கால்வாய்களில் சரிவர தூர்வாரப்படாமல் இருந்ததால் மழைநீா் ஆங்காங்கே தேங்கி நின்றதால் பொதுமக்கள் பொிதும் அவதியடைந்துள்ளனா். 

இதேபோல் திருச்சி மாநகர பகுதிகளான கருமண்டபம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீா்த்தது. கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். 

இதையும் படிக்க:  தமிழ்நாடு சட்டப்பேரவை... எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?!!