கோவையில் முதன்முறையாக பறிமுதல் செய்யப்பட்ட பொருள்... சொத்துகள் விரைவில் முடக்கப்படும் - காவல் துறை!

கோவையில் முதன்முறையாக  பறிமுதல் செய்யப்பட்ட பொருள்... சொத்துகள் விரைவில் முடக்கப்படும் - காவல் துறை!
Published on
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் இளம் வயதினரை குறிவைத்து விற்கப்படும் சிந்தெடிக் போதை மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சிந்தெடிக் போதை மருந்துகள்:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே அத்திப்பாளையம் பகுதியில் கார் ஒன்றில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது  காரில் இருந்த ஒருவர் தப்பிச் செல்ல, மற்றொருவரைக் காவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.

பறிமுதல்:

இதனையடுத்து காருக்குள் சோதனையிட்டதில், விலை உயந்த சிந்தெடிக் போதை மருந்துகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவற்றைப் பறிமுதல் செய்த காவலர்கள், கைது செய்தவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். 

சொத்துகள் விரைவில் முடக்கப்படும்:

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை காவல்துறை கண்காளிப்பாளர் பத்ரிநாராயணன், கோவை மாவட்டத்தில் முதன்முறையாக வசதி படைத்தவர்கள் நடத்தும் போதை பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் சிந்தெடிக் ட்ரக்ஸ் பிடிபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சட்ட விரோதமாக போதைப் பொருட்களை கடத்துவோரின் சொத்துகள் விரைவில் முடக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com