தாயகம் திரும்பிய தமிழ்நாட்டு மீனவர்கள்!

தாயகம் திரும்பிய தமிழ்நாட்டு மீனவர்கள்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாட்டை சோ்ந்த 22 மீனவா்கள் சென்னை வந்தடைந்தனா். 

ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, கடலூா் ஆகிய மாவட்டங்களை சோ்ந்த மொத்தம் 22 மீனவா்கள் கடந்த மாதம் 22-ம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனா். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவா்களை இலங்கை கடற்படை போலீசார் கைது செய்து, படகுகளுடன் இலங்கைக்கு அழைத்து சென்றனா். பின்னா் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டன. இதனையடுத்து 22 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. தொடா்ந்து அவா்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னா் அவா்களுக்கு அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த மீனவர்களுக்கு பாஜக சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, உணவு பொருட்கள் கொடுக்கப்பட்டது. தொடா்ந்து அவா்கள் அனைவரையும் மீன்வளத்துறை அதிகாரிகள் அவரவா் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிக்க:கலைஞர் நூற்றாண்டு நூலகம்; இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!