புகையிலைப்பொருட்களை தடை செயவதற்கான அவசர சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரனும்

புகையிலைப்பொருட்களை தடை செயவதற்கான அவசர சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரனும்

புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழ்நாடு மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்தும், கொலை, கொள்ளை, பெண்கள் மீதான வன்முறை மற்றும் பிற சமூக குற்றங்களுக்கு காரணமாக இருக்கும் குட்கா பான்பராக் உள்ளிட்ட  போதை பொருள்களை தடை செய்யக்கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு மக்கள் இயக்கம்

புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூக அமைப்பு தலைவர்கள் மற்றும், பெண்கள், கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகையிலை கட்டுப்பாட்டிற்கான தமிழ்நாடு மக்கள் அமைப்பு செயலாளர் செல்வின் அலெக்சாண்டர்,
தமிழகத்தில் புகையிலை பொருட்களை விற்பனை  செய்யலாம் என உயர்நீதிமன்ற உத்தரவினால் நாட்டில்  குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை பாதிப்பு ஏற்படும் எனவும் தமிழக அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி  புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்து புகையிலை விற்பனையை தடை செய்ய வேண்டும் எனவும்.
உணவு பாதுகாப்பு சட்டத்தின் சரத்து 34 இன் கீழ் தமிழ்நாட்டில் பான்பராக் மற்றும் புகையிலை நிரந்தரமாக தடை செய்ய முடியும் எனவும் மதுரை நீதிமன்றமும்,  சென்னை உயர்நீதிமன்றத்திலையும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுவது என்பது பயனிலை எனவும் தெரிவித்தார்.

 தமிழ்நாடு இளைஞர்கள் மீது அக்கறை

காரணங்களும் அவியங்களும் நிறைய இருப்பதாகவும் தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு நிரந்தர தடை சட்டம் அமல்படுத்த வேண்டும் எனவும்,
தமிழ்நாடு முழுவதும் இயங்கி வந்த 10 புக்கா பார்களை மூடுவதால் எந்த பயனும் இல்லை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தக்கூடிய பான்பராக் போன்ற புகையிலை பொருட்களை தடை செய்வது அவசியம் என அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com