மகனுக்காக நயினார் நாகேந்திரனுடன் காரசாரமாக விவாதம் செய்த முதலமைச்சர்....!!!

மகனுக்காக நயினார் நாகேந்திரனுடன் காரசாரமாக விவாதம் செய்த முதலமைச்சர்....!!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஐபிஎல் டிக்கெட், மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது மகன் குறித்து பேசியது சமுக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் இன்று பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என வலியுறுத்தினார்

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மத்திய அமைச்சரின் பெயரை விமர்சனம் செய்தோ, கேலி செய்தோ அமைச்சர் பேசவில்லை என்றும், திரு என்று சொல்லி தான் பேசியுள்ளார், அதில் என்ன தவறு உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.  மேலும், தவறாக இருந்தால் பெயரை நீக்க தயாராக இருக்கிறோம்", என்று பதிலளித்தார்.

இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "அவர் பெயர் இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன்", என்று தெரிவித்தார்.

பின்னர் மீண்டும் பேசிய முதலமைச்சர்,"அவர் பெயர் தகாத வார்த்தையா? சொல்லுங்கள். மத்திய அமைச்சரின் பெயர் தகாத வார்த்தையா? எதற்காக அவை குறிப்பில் இருந்து நீக்க சொல்கிறீர்கள்? என கேள்வியெழுப்பினார்.  இதனால் அவையில் சிறிது நேரம் காரசார விவாதம் நடைபெற்றது.

இதையும் படிக்க:   பூமியின் வளமான பெண்...28 ஆண்டுகளில் 44 குழந்தைகள்..!!